ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி குறித்து புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் வினீத் தகவல்

திருப்பூர், ஏப்.28: ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகிக்கப்பட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் தரமற்ற அரிசி மற்றும் பொருட்கள் வழங்க கூடாது. தரமற்ற அரிசி பெற்றால் அந்த அரிசியை உடனடியாக, ரேஷன் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தி கிடங்கிற்கு அனுப்பிவைக்க வேண்டும். கிடங்குகளில் உள்ள பொருட்கள் தரம் குறைந்ததாக காணப்பட்டால், அதை ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடாது. பயோமெட்ரிக் விற்பனை முனைய எந்திரத்தில் விரல் ரேகை பதிவாகவில்லை. இந்த காரணத்தினால் பொருட்களை வழங்காமல் திருப்பி அனுப்பகூடாது. ரேகை விழாதவர்களுக்கு 5 நிமிடம் இடைவெளி விட்டு மீண்டும் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னரும் ரேகை பதிவாகவில்லை என்றால், பதிவேட்டை பராமரித்து பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும்.தரமற்ற அரிசி கைரேகை பதிவு தொடர்பான புகார்களுக்கு அந்தந்த தனி தாசில்தார்களை தொடர்புகொண்டு தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவுக்கு தனி தாசில்தார் ராசு 9865128733, தாராபுரம் தனி தாசில்தார் தேன்மொழி 9489812051, காங்கயம் தனி தாசில்தார் ராஜேந்திர பூபதி  9750375660, மடத்துக்குளம் தனி தாசில்தார் கவுரி சங்கர் 8838076843 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இதுபோல், பல்லடம் தனி தாசில்தார் சையது ராபியம்மாள் 8667415669, திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தாசில்தார் தங்கவேல் 9487855557, திருப்பூர் தெற்கு தனி தாசில்தார் தினேஷ் ராகவன் 9842416961, உடுமலை தனி தாசில்தார் தயானந்தன் 9942277555, ஊத்துக்குளி தனி தாசில்தார் மாறன் 9524322010 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: