உள்ளூர் பார்க்கிங்கை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

ஊட்டி, ஏப்.28: ஊட்டி நகரில் பார்க்கிங்கில் உள்ளூர் கடை உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சுற்றுலா நகராமான ஊட்டிக்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் ெகாண்டே செல்கிறது. ஆனால், ஊட்டியில் போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லை. தற்போது ஊட்டியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரில் முக்கிய வீதிகளில் கடை வைத்துள்ள கடை உரிமையாளர்கள் அனைத்து பார்க்கிங்கிலும் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர்.

இதனால், வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காத சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இடம் தேடி பல முறை மார்க்கெட் சாலையை சுற்றி, சுற்றி வர வேண்டியுள்ளது. தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள் தோறும் ஊட்டிக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொள்வதற்கு செல்லவோ அல்லது பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் வியாபாரிகள் தங்களது வாகனங்ளை பார்க்கிங்கில் நிறுத்தாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், வியாபாரிகளும் தங்களது வாகனங்களை சீசன் முடியும் வரை ஏடிசி., பார்க்கிங் தளத்தில் நிறுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நகருக்குள் நிறுத்த வாய்ப்புள்ளது. இதன் மூலம் உள்ளூர் வியாபாரிகளுக்கும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் உணவு உட்கொண்டு, ஏதேனும் பொருட்களை வாங்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

Related Stories: