விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

ஈரோடு, ஏப்.28: ஈரோடு விதை பரிசோதனை நிலையத்தில் கோவை விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு சத்தி ரோடு வீரபத்திர வீதியில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் கோவை மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர், ஆய்வகத்தில் பரிசோதனைக்கு வரும் மாதிரிகள் விதைச்சட்டம் 1966ன்படி ஆய்வு செய்யப்படுகிறதா?, காப்பு விதை மாதிரிகள் உரிய வெப்பநிலை மற்றும் ஈரபதத்துடன் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்தார். தொடர்ந்து, விதை முளைப்புத்திறன் அறையில் விதை மாதிரிகளின் முளைப்புதிறனை பரிசோதித்து, பிற ரக கலப்பு என்பது ஒரே பயிரின் வேறு ரக விதைகள் கலந்திருந்தால் விளைபொருளின் தரம் குறைந்து நஷ்டம் ஏற்படும் எனவே, பிற ரக கலப்பு விதைகளை கண்டறிவது குறித்து தொழில்நுட்ப அறிவுரைகளையும் வழங்கினார். மேலும், பரிசோதனையின்போது அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு விதை பரிசோதனை நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை துரிதமாக முடித்து உடனுக்குடன் முடிவுகளை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது, விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சாந்தி, கோகிலீஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: