சாராயம் காய்ச்சியவர் கைது

ஈரோடு,  ஏப்.28:  ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் எம்.சாணார்பாளையத்தில் சாராயம்  காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகத்திற்கு நேற்று  தகவல் வந்தது. இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி,  எஸ்ஐ மோகனசுந்தரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  அப்போது, எம்.சாணார்பாளையத்தில் மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு அருகே  உள்ள தோட்டத்தின் மறைவிடத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயம் காய்ச்சிய மாரிமுத்து(45)  என்பவரை போலீசார் கைது செய்து, 450 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர்  சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: