வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.28: தமிழ்நாடு வணிக வரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் விஜி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகிராணி, ராகவன், வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட  1,000 துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அலுவலர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது வழக்கமான கவுன்சலிங் முறையில் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும்.

கோட்ட அளவிலான மாறுதல்களைக் கைவிட வேண்டும். காதி துறையில் இருந்து வணிக வரித் துறைக்கு வந்தவர்களுக்கு சிறப்பு நிலை பதவி வழங்கியதை திரும்ப பெற்று, அவர்களது சம்பளத்தை திரும்பப் பெறும் நடைமுறையைக் கைவிட வேண்டும். 25 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியவர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திரளான வணகவரித்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: