தமிழக முதல்வருக்கு மனு பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஈரோடு, ஏப்.28: அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத்தின்  மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ராஜசேகர்,  மாநில துணைத் தலைவர் குப்புசாமி, மாநில துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட  செயலாளர் சின்னசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில், பிஎஸ்என்எல்  நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 15 சதவீதம் ஓய்வூதிய உயர்வு  வழங்க வேண்டும். இதுபற்றிய கோரிக்கையின்படி பார்லிமென்ட் கமிட்டி,  ஓய்வூதியர்களின் 65வது வயதில் 5 சதவீதம் 70வது வயதில் 10 சதவீதம், 75 வது  வயதில் 15 சதவீதம், 80வது வயதில் 20 சதவீத உயர்வுக்கு பரிந்துரைத்தது. அதை  உடனடியாக நடைமுறைப்படுத்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, மருத்துவச் செலவுக்கான ரசீதை  அனுப்பி, செலவுத்தொகை பெறும் எம்.ஆர்.எஸ். முறையையே தொடர வேண்டும்.  பிஎஸ்என்எல் நஷ்டத்தில் உள்ளதாக கூறி, அத்தொகையை வழங்காமல் உள்ளனர்.  இத்திட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை  பெறலாம். தற்போது சிங்காநல்லுார், திருச்சி, புதுச்சேரி என குறிப்பிட்ட  இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை பெற வலியுறுத்துவதை  கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: