சவுதியில் இறந்தவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

திருச்சி, ஏப்.26: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (49), இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 1 மகன். சத்தியமூர்த்தி ரியாத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில், ஏப்ரல் 8ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய உறவினர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். உடனே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி செய்யும்மாறு கேட்டு கொண்டனர். அதன்படி நேற்று லங்கன் ஏர்லைன்ஸ் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அவரது உடல் வந்தது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத் தலைமையில் திருச்சி விமான நிலையம் சென்று சத்தியமூர்த்தியின் உடலை பெற்று, அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். இந்தியன் சோசியல் போரத்தின் நிர்வாகிகளுக்கும், SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும் சத்தியமூர்த்தியின் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: