அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

திருச்சி, ஏப். 25:திருச்சி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (52). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் மலைக்கோட்டை பஸ் டெப்போவில் இருந்து பஸ்சை எடுத்து கொண்டு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து செந்தண்ணீர்புரம் சென்றார். பின்னர், அங்கிருந்து பயணிகளுடன் செந்தண்ணீர்புரத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு நேற்று பஸ்சை ஓட்டி வந்தார். சங்கிலியாண்டபுரம் சாலை குறுகிய சாலை என்பதால் பஸ்சின் பின்னால் பைக்கில் வந்த 3 பேர், வழிவிடுமாறு ஹாரன் அடித்தனர். இருப்பினும் அரசு பேருந்து டிரைவர் வழிவிடாமல் ஓட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் பேருந்தை ஓவர்டேக் செய்து காஜாபேட்டை அரசமரத்தடியில் வழிமறித்து நிறுத்தி டிரைவர் சேகரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கல்லை வீசி அரசு பேருந்து முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து அரசு பேருந்தை சேதப்படுத்தியதாக காஜாபேட்டை அண்ணாநகர் பிலாலுதீன் (26), தென்னூரை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: