மகாத்மா காந்தி வேலை திட்ட குறைதீர்ப்பாளர் பொறுப்பேற்பு

திருப்பூர், ஏப் 22:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவின் கீழ், திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்ப்பாளராக பிரேமலதா பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து புகார்களை பெற்று, புகார்களை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.

பிரச்னை நடைபெறும் இடத்திலேயே விசாரணை நடத்தலாம். பதிவு செய்யப்பட்ட ஊதியத்தை தாமதமாக வழங்குதல் அல்லது வேலையில்லாதபடி வழங்காதது தொடர்பான பிரச்னைகள் உட்பட குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்வார். எனவே குறை தீர்ப்பாளரை 9655521233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: