மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் திருப்பூர் அருகே பரபரப்பு

திருப்பூர், ஏப்.22: திருப்பூர் தாராபுரம் சாலை பெருந்தொழுவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (80). உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். அவரது உடலை பெருந்தொழுவு பகுதியில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சடலத்துடன் ஞானப்பிரகாசத்தின் ஆதரவாளர்கள் பெருந்தொழுவு 4 சாலை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு சென்ற அவினாசிபாளையம் போலீசார் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் பின்னர் திருப்பூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஞானப்பிரகாசத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: