அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேர் விருப்ப மனு

ஈரோடு, ஏப். 22: அதிமுக கட்சியியில் அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கான நிர்வாகிகள் தேர்தலுக்காக ஈரோட்டில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று விருப்ப மனுக்களும், விருப்பக்கட்டணமும் பெறப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இதில், தற்போதைய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமலிங்கம்,மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பரமணி, கிட்டுசாமி, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன் ஆகிய 4பேர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு  விருப்பமனு வழங்கினர்.

மாநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பதவிக்கு தற்போதைய அவைத்தலைவரான ராமசாமி, பைபாஸ் சிவக்குமார் ஆகியோர் மனு கொடுத்தனர். இணை செயலாளர் பதவிக்கு ஜெலட்சுமி மோகன், விஜயா ஆகியோரும், துணை செயலாளர் பெண்கள் பதவிக்கு பாப்பாத்தி மணி, பானுசபியா, தேவகி சேகர், சரளா தேவி ஆகியோரும், துணை செயலாளர் ஆண்கள் பதவிக்கு நடராஜ், அமராவதி சேகர் என்ற குணசேகரன், வெங்கடாச்சலம், முருகானந்தம் ஆகியோரும் விருப்ப மனு வழங்கினர்.

பொருளாளர் பதவிக்கு அப்பாத்துரை, பாவை அருணாசலம் ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு பரிமளா, சோழா லோகநாதன், செல்வராஜ், முரளிதரன், கருப்பணன், சண்முகம் என்ற கேபிள் ரமேஷ், லிங்கேஸ்வரன், பாலகிருஷ்ணன், சின்னு என்ற சின்னசாமி ஆகியோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.

 அதிமுகவில் பதவிகளை கைப்பற்றுவதில் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Related Stories: