சாலையோர சிக்கன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி, ஏப்.21: விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவின்படி சிவகாசி பைபாஸ் சாலை, பஸ் நிலையம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள சாலையோர சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்த பட்டது. சிவகாசி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜாமுத்து, சந்திரசேகர, மோகன்குமார்,வெங்கடேஷ்வரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டதில் செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட இறைச்சி 42 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் ஐந்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது குறித்து சிவகாசி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து கூறுகையில், மாநகரா்ட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர உணவு கடை விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

உணவில் கலப்படம், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க படும். பொதுமக்கள் உணவு பொருட்களில் தரம் குறைவாக இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் என்னில தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: