விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சாத்தூர், ஏப். 21: சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கோட்டாட்சியர் புஷ்பா தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 8 வகையான காய்கறி விதைகளுடன் 2 கிலோ மண்புழு உரம் அடங்கிய தொகுப்பு 75% மானியத்திலும், தோட்டக்கலை பயிர்களான காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ஹெக்டருக்கு ரூ. 5000 மதிப்பிலான இடுபொருட்களும், நெகிழி கூடையுடன் 50% மானியத்திலும், வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகள் நடுதல் திட்டத்தின் கீழ் 8 வகை மரக்கன்றுகள் 100% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து தெளிவுறுத்தப்ட்டது.

இதற்கான பயனாளிகள் தேர்வு பணி நடைபெற்று வருவதால் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இக்கூட்டத்தில் சாத்தூர் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: