×

சிறு மழைக்கே தேங்கும் தண்ணீர் சாலையை சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

காளையார்கோவில், ஏப்.21: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழியில் சேதமடைந்த சிமிண்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 43 பஞ்சாயத்திற்கு தலைமையிடமாக உள்ளது. ஒன்றிய அலுவலகம் செல்லும் சிமிண்ட் ரோடு ஐந்து வருடங்களுக்கு முன் போடப்பட்டது. அப்போது மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை தாழ்வாக இருந்ததால் மழைநீர் தேங்காமல் வெளியேறியது.

 தற்போது நெடுஞ்சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டதால் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் சிமிண்ட் ரோடு பள்ளம் ஆகிவிட்டதால் சிறு மழைக்கே தண்ணீர் வெளியேற முடியாமல் குளம்போல் தேங்கி நின்று சகதியாக மாறி விடுகின்றது. தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் திருக்கானபேர் கருணாநிதி கூறுகையில், பல்வேறு துறைகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உள்பட நாள் ஒன்றுக்கு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் சாலை மோசமாக கிடக்கிறது. நமது ஒன்றியத்திற்கு தலைமையிடமாக இருப்பதால் சாலை வசதி, சுகாதார வசதி நன்றாக இருக்க வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...