×

விவசாயத்துடன் இணை தொழிலாக மீன் வளர்த்தால் 6 மாதத்தில் ரூ.1.50 லட்சம் லாபம் பெறலாம்

சிவகங்கை, ஏப்.21: விவசாயத்துடன் இணை தொழிலாக மீன் வளர்ப்பிலும் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்னைக்குட்டைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் தற்பொழுது ஊரக வளர்ச்சித்துறையுடன் ஒருங்கிணைந்து தரிசு நிலங்கள் சீரமைத்து விவசாயிகளுக்கு விளை நிலங்களாக மாற்றி கொடுக்கப்படுகிறது.

தோட்டக்கலைத்துறையின் மூலம் அரசு மானியத்தில் பலவகை மரக்கன்றுகள் வழங்குவதுடன் நுண்ணீர் பாசன திட்டம், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் மூலம் விவசாயிகள் சோலர் மின் இணைப்புகளை பயன்படுத்தும் வகையில் ரூ.5 லட்சம் வழங்குகின்றன. இதில் ரூ.3 லட்சம் அரசு மானியமாக வழங்குகிறது.

விவசாயிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சம் மட்டுமே. மாவட்டத்தில் விவசாயப்பணிகள் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மற்ற காலத்தில் இணைத்தொழிலாக பண்ணைக்குட்டையில் மீன்வளர்த்தால் ஆறு மாதத்தில் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை லாபம் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...