கார்பைடு கற்களால் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை

ஊட்டி, ஏப்.21: கார்பைடு கற்களை கொண்டு பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. பழம் மற்றம் பழரசம் விற்பனை அதிகமாக நடக்கிறது. பெரும்பாலான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றலா பயணிகள் அதிகளவு குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

அதேபோல், கடைகளில் சென்று பழரசம் (ஜுஸ்) குடிப்பதையும் மக்கள் வாடிக்கையாக ெகாண்டுள்ளனர். இதனால், அனைத்து பழக்கடைகளிலும் ஜுஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு அனைத்து பழங்களுமே வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஒரு சில பழங்கள் மட்டும் உள்ளூரில் கிடைக்கும். சமவெளிப் பகுதிகளில் ஓரிரு நாட்களில் காய்கள் பழுத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளிரான சீதோஷ்ண நிலையால், பழுக்க சற்று தாமதம் ஏற்படும்.

இதனால், சில வியாபாரிகள் அங்கிருந்து லாரிகள் மூலம் பழங்களை கொண்டு வரும் போதே, சுண்ணம்பு தண்ணீர் தெளித்தும், கார்பைடு கற்களை பயன்படுத்தியும் பழுக்க வைக்கின்றனர். இது போன்று கார்பைடு கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்களை உட்கொள்வதன் மூலம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பழக்கடைகள் மற்றும் கிடங்குகளில் சோதனை மேற்கொண்டு கார்பைடு கற்களை பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். ஆனால், இம்முறை எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் விற்பனை செய்யப்படும் பழங்கள் கார்பைடு கற்களை கொண்டே பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனை வாங்கி உட்கொள்ளும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு ேமற்ெகாள்ள வேண்டும். சுகாதாரமான மற்றும் இயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: