₹75 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, ஏப்.20: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். விரலி மஞ்சள் 940 மூட்டை, உருண்டை மஞ்சள் 420 மூட்டை, பனங்காளி 110 மூட்டை என மொத்தம் 1470 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விரலி குவிண்டால் ஒன்றுக்கு ₹9,483க்கும், குறைந்தபட்சம் ₹6,839க்கும், சராசரியாக ₹6,900ல் இருந்து ₹8,100 வரை ஏலம் போனது. உருண்டை ரக மஞ்சள் அதிகப்பட்சம் ₹7,989க்கும், குறைந்தபட்சம் ₹6,412க்கும், சராசரியாக ₹6,300ல் இருந்து ₹7,000 வரையும், பனங்காளி ரகம் அதிகபட்சம் ₹21,012க்கும், குறைந்தபட்சம் ₹8,888க்கும், சராசரியாக ₹18,000ல் இருந்து ₹8,500 வரை என மொத்தம் 1,470 மூட்டைகள் ₹75 லட்சத்துக்கு விற்பனையானது.

Related Stories: