ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாநில செயற்குழு முடிவின்படி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பாலசண்முகம் வரவேற்றார். வட்ட பொருளாளர் கருணாநிதி பேசினார். இதில், போக்குவரத்து ஊழியர் சங்க ஓய்வுபெற்ற நல அமைப்பு குணசேகரன் வாழ்த்தி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன், வட்ட செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பபெற அளிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. அவைகளை தமிழக அரசு தீர்த்து வைக்க வேண்டும். கூடுதல் ஓய்வூதியம் பெறும் தகுதியான வயதை 80லிருந்து 70 ஆக குறைத்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் ₹7850 வழங்கிட வேண்டும். 1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: