காரிமங்கலம் வாரச்சந்தையில் ₹47 லட்சத்திற்கு மாடு விற்பனை

காரிமங்கலம், ஏப். 20: காரிமங்கலத்தில் வாரந்ேதாறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சந்தைக்கு ஆடு, மாடு மற்றும் நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். நேற்றைய சந்தைக்கு 550 மாடுகள், 450 ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இவற்றை வாங்க தமிழகம் மட்டுமின்றி, பெங்களூருவில் இருந்தும் வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். காலை முதலே சந்தையில் வியாபாரம் களைகட்டியது. இதில் ₹35 லட்சத்திற்கு மாடுகளும், ₹10 லட்சத்திற்கு ஆடுகளும், ₹2 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் என மொத்தம் ₹47 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: