மங்களபுரத்தில் பரவலாக மழை

நாமக்கல், ஏப்.19: ஏப்ரல் மாதம் பிறந்தது முதலே நாமக்கல் மாவட்டத்தில் வெயில் போட்டு தாக்கியது. அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அளவு பதிவான நிலையில், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. நாமக்கல் நகரில் இரவில் சிறிது நேரம் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி வரை, மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: குமாரபாளையம் 30, மங்களபுரம் 44, நாமக்கல் 2, பரமத்திவேலூர் 6, புதுச்சத்திரம் 63, ராசிபுரம் 20, சேந்தமங்கலம் 25, திருச்செங்கோடு 22, கொல்லிமலை 10 மில்லி மீட்டர்.

Related Stories: