தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு

தேன்கனிக்கோட்டை, ஏப்.19: தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில், தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. தீயணைப்புப்பணியில் இருந்த போது உயிரிழந்த வீரர்கள் நினைவாக, தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் பச்சையப்பன் மற்றும் பணியாளர்கள், நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: