தர்மபுரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் 2 டன் மாம்பிஞ்சு உதிர்ந்தது கடத்தூர் அருகே ஓட்டுனர் குடும்பத்திற்கு

நிதிஉதவிகடத்தூர், ஏப். 19: கடத்தூர் அடுத்த தா. அய்யம்பட்டியை சேர்ந்த டிரைவர் சிவப்பிரகாசம். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சரிவர பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில், சிவப்பிரகாசத்தின குடும்பத்திற்கு ₹25 ஆயிரம் நிதி உதவியை, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய தலைவர் குமார், செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் சிவக்குமார், துணை பொருளாளர் ஜெயக்குமார், பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 80 மின்கம்பங்கள் சேதம் தர்மபுரி மாவட்டத்தில் வெண்ணாம்பட்டி, கடத்தூர், ஜக்கசமுத்திரம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம், மழையின் போது சூறைக்காற்று வீசியதில் 80க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை, மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுடன் வந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீர்செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

Related Stories: