டீசல் விலையேற்றம் கண்டித்து பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கடத்தூர், ஏப். 19: டீசல், மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து, நேற்று கடத்தூரில் பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒடசல்பட்டி, மணியம்பாடி, அய்யம்பட்டி, தாளநத்தம், தென்கரைக்கோட்டை சுற்றியுள்ள பகுதியில், 50க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 30க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரத்துக்கு மணிக்கு ₹1000 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. டீசல், மூலப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், டிரைவர் படி ₹300 மற்றும் குறைந்தபட்ச வாடகையாக மணிக்கு ₹2,500 கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: