அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, தங்க மோதிரத்தை ராஜேஷ்குமார் எம்பி வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 1ம் தேதியன்று, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் வழங்குவதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் புதுச்சத்திரம், எருமப்பட்டி, வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் பிறந்த 12 தம்பதிகளின் குழந்தைகளுக்கு, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி, தங்க மோதிரம் அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Related Stories: