அச்சக உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓசூர், ஏப்.13: ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில், காகிதம் மற்றும் அச்சுப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், அச்சுப் பணிகளில் ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரியும், அச்சகங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஓசூர் அச்சக உரிமையாளர்கள் சங்கம், தேன்கனிக்கோட்டை வட்டம் அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கம், ஓசூர் டிஜிட்டல் பிரிண்டர்ஸ் அசோசியேசன், பாகலூர் அச்சக உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சூளகிரி ஒன்றிய அச்சக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு தலைவர் துரை நிறைவுரையாற்றி, பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Related Stories: