கிருஷ்ணகிரி அருகே இருதரப்பினர் இடையே மோதல் 8 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி அடுத்த கம்பம்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(39). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவருக்கும், நிலம் சம்பந்தமாக கடந்த 5 வருடமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பிரச்னைக்குரிய நிலத்தின் வழியாக, கடந்த 2ம் தேதி கார்த்திகேயன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ரங்கன், கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றிய நிலையில், ரங்கன் மற்றும் அவரது மனைவி பாஞ்சாலி, மகன் செந்தில்குமார், மருமகள் விஜயா ஆகிய 4 பேரும் சேர்ந்து, கார்த்திகேயனை கட்டையால் தாக்கினர். இதில், படுகாயமடைந்த கார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கார்த்திகேயன் மகாராஜ கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரங்கன், பாஞ்சாலி, செந்தில் குமார், விஜயா ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் ரங்கன் கொடுத்த புகாரின் பேரில், சிகிச்சை பெற்று திரும்பிய கார்த்திகேயன், யோகனாதன், காந்தா(55), கல்பனா(31) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: