சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.

சேத்துப்பட்டு, ஏப்.2:சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(50), விவசாயி. இவரது விவசாய விளை நிலத்தில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்து கிடந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறந்த நபர் யார்? இவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செ்து கொண்டாரா? என்பது விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீப நாட்களாக அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மர்ம கும்பல் வெளியே கொலை செய்து விட்டு தப்பிப்பதற்காக கிணறு, மற்றும் ஏரியில் சடலங்களை வீசிச்செல்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: