ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு

வேலூர், ஏப்.2:வேலூரில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. இதில் எம்எல்ஏ, மேயர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் அங்கன்வாடியில் செயல்படும் வளர்ச்சி பணிகள் குறித்து வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. எம்எல்ஏ கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மண்டல குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், வெங்கடேசன், நியமன குழு உறுப்பினர் கணேஷ் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் கோமதி திட்ட விளக்க உரையாற்றினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சில்வியா வினோதினி வரவேற்றார். மேயர் சுஜாதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 வார்டு உறுப்பினர்களுக்கு குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி திட்டங்கள் கண்காணித்தல், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து, கருத்தரித்த நாள் முதல் குழந்தை பிறந்த 2 ஆண்டுகள் வரை 1000 நாட்கள் வரை கண்காணித்தல், பொதுசுகாதாரம் பேணி காத்தல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் போஷன் அபியான் திட்டத்தின் முக்கிய பணிகள், ஒருங்கிணைந்து செயல்படுதல், ஒருங்கிணைந்த செயல் திட்டம், நிர்வாக அமைப்பு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் செயல்படுத்துதல், சமுதாய சார்ந்த நிகழ்ச்சிகள், படிப்படையாக கற்றல் அணுகுமுறையின் நேரடி கண்காணிப்பு, அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு, கண்காணிப்பு மற்றும் முறைப்படுத்தும் குழுக்கள், வட்டார கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு உறுப்பினர்கள், கிராம நல சுகாதார மற்றும் ஊட்டச்சத்துக்குழு போன்ற ஏற்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 44 வார்டு கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: