கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்

குடியாத்தம், மார்ச் 31: குடியாத்தத்தில் கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் நடந்தது. குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 110வது பேரவை கூட்டம் பிச்சனூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான அருட்பெருஞ்ஜோதி தலைமை தாங்கினார். வங்கி பொது மேலாளர் அருள் வரவேற்றார்.

இதில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் கலந்து கொண்டு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் நகராட்சி தலைவர் சவுந்தரராஜன் வங்கி உறுப்பினர்களுக்கு லாபத்தொகையை வழங்கினார். பின்னர் வங்கி வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: