ஆரணி அருகே விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேர் மீது வழக்கு

ஆரணி, மார்ச் 26: ஆரணி அருகே விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த புங்கம்பாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சரவணன், வேலை செய்து வருகிறார். கடந்த 16ம் தேதி அரியாலை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் நிலத்தை சர்வே செய்வதற்காக பணம் செலுத்தியுள்ளார். இதனால், விஏஓ சரவணன், சர்வேயர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நிலத்தை சர்வே செய்வதற்காக சென்றனர். மேலும், அங்கு வந்த பக்கத்து நிலத்தை சேர்ந்த கஸ்தூரி, இவருடைய மகன்கள் முத்து, முத்துசாமி நிலத்தை அளவீடு செய்ய விடாமல்,

அந்த நிலம் எனக்கு சொந்தமானது என கூறி விஏஓ சரவணனுடன் வாக்குவாதம் செய்து நிலத்தை அளவீடு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, விஏஓ சரவணன் களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கஸ்தூரி, முத்து, முத்துசாமி ஆகிய மூவரும் விஏஓ சரவணனை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: