மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு

திருவண்ணாமலை, மார்ச் 24: விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதிகளில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மாணவர்கள், மாணவிகளுக்கு தனி தனியாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 22ம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில், விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மாநில அளிவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: