தபால் வாக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டி குடியாத்தம் நகராட்சியில் படம் உள்ளது

குடியாத்தம், பிப்.18: குடியாத்தம் நகராட்சியில் தபால் வாக்கு செலுத்துவதற்காக சீல் வைக்கப்பட்ட பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியில் தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்ற உள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு, தபால் மூலம் ஓட்டுப்போடுவதற்கு, குடியாத்தம் நகராட்சியில் தற்போதுவரை 80க்கும் மேற்பட்ட ஒட்டு படிவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடியாத்தம் நகராட்சியில் 91 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குடியாத்தம் நகராட்சி, நிர்வாகம் சார்பில் தபால் வாக்குகள் செலுத்தும் நபர்களுக்காக குடியாத்தம் நகராட்சி அலுவலக நுழைவுவாயில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: