15 வார்டுகளில் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் ஒடுகத்தூர் பேரூராட்சியில்

ஒடுகத்தூர், பிப்.17: ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்டது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பேனா, பென்சில், மை போன்ற பொருட்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.ஒடுகத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 38 பேர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து வேட்பாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 15 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு பேரூராட்சி ஊழியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் முனுசாமி தலைமையில் நேற்று வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நடந்தது. இதில், 15 வார்டுகளில் உள்ள மொத்தம் 9,069 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டது.

Related Stories: