தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

திருச்சி, ஜன. 29: திருச்சி கலெக்டர் சிவராசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் அனைத்தும் சேர்த்து 1,262 வாக்குச்சாவடிகள் உள்ளன. 10,58,674 வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள்படி 3 பேருக்கு மேல் பிரசாரத்துக்கு செல்லக்கூடாது. பேரணி, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளரங்கில் 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி. இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது.

மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.85 ஆயிரம் தான் செலவு செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் 35 ஆயிரம் பேர் சேர்த்துள்ளோம். பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான துணை வாக்காளர் பட்டியல் இணைப்பாக வழங்கப்படும். 157 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இது கூடவும் செய்யும். சிசிடிவி கேமிரா பொருத்தப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதிகமான நபர்கள் பிரசாரத்துக்கு சென்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான தேர்தல் செவவினம் வேட்பாளர் கணக்கி்ல் எழுதப்படும். வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. தேர்தல் பிரசாரத்தின் போது சிறுவர்கள் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பயிற்சி வகுப்பின் போது தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலின்போது பிடிபட்ட தொகையில் 98 சதவீதம் பேர் உரிய ஆவணங்களை செலுத்தி பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதில் ரூ.1.07 லட்சம் பணம் இதுவரை யாரும் கேட்டு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, தேர்தல் தாசில்தார் (பஞ்சாயத்து) மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: