மாநகராட்சி, நகராட்சிகளில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ேதர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது

வேலூர் , ஜன.29: வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும் கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சியில் 437 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. 2 நகராட்சிகளில் 141 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. பேரூராட்சிகளில் 68 வாக்குச்சவாடி மையங்கள் என்று மொத்தம் 646 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

இதில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக மாநகராட்சியில் 71 வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 2 நகராட்சிகளில் 20 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் இல்லை. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 91 வாக்குச்சாவடி ைமயங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேரடியாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: