சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும்

க.பரமத்தி, ஜன.29: கரூர் மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்கள் 6வட்டங்கள் 8 ஊராட்சி ஒன்றியங்கள் இவற்றின் கீழ் 157ஊராட்சிகள் உள்ளன. கரூர் வட்டத்தில் கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்கள் அரவக்குறிச்சி வட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்கள் உள்ளன. திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக செயல்பட்டு வந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்ட போது கரூர் வருவாய் கோட்டம் மட்டுமே இருந்தது. மாவட்டமான போது வட்டமாக இருந்த குளித்தலை வருவாய் கோட்டமாக தரம் உயர்த்தப்பட்டபோது கரூர் வட்டத்தில் இருந்த அரவக்குறிச்சி தனி வட்டமாக தரம் உயர்த்தப்பட்டபோது க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் அரவக்குறிச்சி வட்டத்துடன் இணைக்கப்பட்டது.  இதில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 17ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 30ஊராட்சிகளும், 246வார்டுகளை ஒன்றிய நிர்வாகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தி வருகிறது.

நிர்வாக வசதிக்காக க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பொதுமக்களிடம் இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் நிலையை உயர்த்துதல் பிரித்தல், சேர்த்தல், தொடர்பான கூட்டம் கடந்த 14ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற போது க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைத்து 15ஊராட்சிகளை அதில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே நிர்வாக வசதிக்காக மக்கள் எளிதில் சென்றடையும் வகையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று காலை முதல் தேர்தல்்்் கண்காணிப்பு பறக்கும் படை மூன்று குழுக்கள்் அமைக்கப்பட்டு காலை, மதியம், இரவு என பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று காலை பறக்கும் படையினர் கரூர் திருச்சி புறவழிச்சாலை குளித்தலை நகர எல்லையான மனத்தடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

Related Stories: