கிருஷ்ணராயபுரம் அருகே உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பழைய ஜெயங்கொண்டம் பேருராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்

கிருஷ்ணராயபுரம், ஜன.29: கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா பழையஜெயங்கொண்டம் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 3012, பெண் வாக்காளர்கள் 3014 மூன்றாம் பாலின வாக்காளர் 1 என மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,027 பேர் கொண்ட 15 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .வார்டுகள் தற்சமயம் மறுசீரமைக்கப்பட்டு புதிய வார்டுகளின் விவரங்கள் வருமாறு: 1-வது வார்டு வடக்கு தொட்டியபட்டி மற்றும் பழையூர் மந்தை (பொதுப்பிரிவு- ஆண்/ பெண்).

2- வது வார்டு ஓமந்தூர் காலனி தெரு மற்றும் பிள்ளையார் கோவில் தெரு ( பொதுப்பிரிவு- பெண்).3- வது வார்டு ஓமந்தூர் குடித் தெரு, நடுத்தெரு, குப்புரெட்டிபட்டி மாரியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, மற்றும் மேற்கு தெரு (பொதுப்பிரிவு ஆண்/பெண்). 4 -வது வார்டு வடக்குத் தொட்டியபட்டி மற்றும் தெற்கு தொட்டியபட்டி (பொதுப்பிரிவு -பெண்).5 -வது வார்டு பழையஜெயங்கொண்டம் பகவதி அம்மன் கோவில் தெரு, மேட்டு காலனி தெரு மற்றும் வடக்கு தெரு (ஆதிதிராவிடர்- பெண்கள்). 6 -வது வார்டு குப்புரெட்டிபட்டி கிழக்குத் தெரு, ஆழ்வார் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு மற்றும் பள்ளிக்கூடத் தெரு (பொதுப்பிரிவு- ஆண்/பெண்). 7- வது-வார்டு புதுப்பட்டி கிழக்குத் தெரு மாரியம்மன் கோவில் தெரு மேற்கு தெரு (பொதுப்பிரிவு ஆண்/பெண்). 8 -வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் கிழக்கு காலனி தெரு, கிழக்கு களம் மற்றும் தாதகவுண்டன்பட்டி( ஆதிதிராவிடர்- பெண்). 9 -வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் ஆலமர தெரு மற்றும் ரைஸ்மில் தெரு ( பொதுப்பிரிவு- பெண்) .

10 -வது வார்டு பழைய ஜெயங்கொண்டம் தெற்கு தெரு, குடித்தெரு வடக்கு மற்றும் தெற்கு ( பொதுப்பிரிவு- பெண்). 11 -வது வார்டு உடையகுளத்துப்பட்டி பாம்பலம்மன் கோவில் தெரு, நடுத்தெரு மற்றும் மேற்கு தெரு (பொதுப்பிரிவு-ஆண்/ பெண்). 12 -வது வார்டு பூவம்பாடி முத்தாலம்மன் கோவில் தெரு, வடக்கு தெரு மற்றும் காலனி தெரு ( பொதுப்பிரிவு - ஆண்/பெண்).

13 -வது வார்டு லட்சுமணம்பட்டி மேற்கு தெரு, தெற்குத் தெரு, அழகாபுரி பள்ளிக்கூடத் தெரு, வடக்கு தெரு (பொதுப்பிரிவு -பெண்). 14 -வது வார்டு லட்சுமணம்பட்டி பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு தெரு, காலனி தெரு, கிழக்கு களம், பாம்பலம்மன் கோவில் தெரு மற்றும் நடுத்தெரு (பொதுப்பிரிவு -பெண்). 15- வது வார்டு புதுப்பட்டி காலனி தெரு புது காலனி தெரு தெற்கு தெரு மற்றும் மாமரத்துபண்ணை தெரு ( ஆதிதிராவிடர்- ஆண் /பெண்). தேர்தல் பணியில் 1 தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 3 பறக்கும் படை பிரிவினர் உள்ளனர்.

Related Stories: