புதிய எல்கைகளோடு பரிணமிக்கிறது 14 வார்டுகளை உள்ளடக்கிய பாளை. மண்டலம் மகளிருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்

நெல்லை, ஜன. 29: நெல்லை மாநகராட்சியின் பாளை மண்டலமானது புதிய எல்கைகளை கொண்டு 14 வார்டுகளோடு வார்டு மறுவரையறையில் காட்சியளிக்கிறது. அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் மிக்க வார்டுகளை உள்ளடக்கிய பாளை மண்டலத்தில் இம்முறை பெண் மண்டல தலைவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. நெல்லை மாநகராட்சியில் பாளை மண்டலத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன.  பாளை. மண்டலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 866 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8வது வார்டில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 584 வாக்காளர்கள் உள்ளனர். பாளை மண்டலத்தின் கீழ் 5,6,7,8,9, மற்றும் 55,32,33,34,35,36,37,38,39 ஆகிய 14 வார்டுகள் வருகின்றன.

இதில் 5,6,37 மற்றும் 55வது வார்டுகள் மட்டுமே ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகளாகும். மற்ற 10 வார்டுகளும் பெண்கள் போட்டியிடும் வகையில் காணப்படுகின்றன. பாளை மண்டலம் பெண் பிரதிநிதித்துவம் அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. 5வது வார்டு எஸ்சி (பொது)க்கும், 36வது வார்டு எஸ்சி பெண்ணுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாளை மண்டலம் 5வது வார்டில் கக்கன் நகர், திம்மராஜபுரம் வஉசி தெருக்கள், வெங்கடேஸ்வரா தெரு, ஆண்டாள் தெற்குத் தெரு, காவலர் குடியிருப்பு, வெங்கடேஸ்வரா நகர், திம்மராஜபுரம் தென்பகுதி, அண்ணாநகர், கக்கன் நகர் நியூ காலனி, சங்கீதா நகர், ரஹ்மத்நகர் 1 முதல் 33வது தெரு வரை, ரஹ்மத் நகர் 40 அடி ரோடு, 60 அடி ரோடு, சதக் கல்லூரி ரோடு, விநாயகர் அவென்யூ, திருச்செந்தூர் சாலை, சாந்தா பிலிப் காலனி, சிவனடியார்குளம், ரஹ்மத் நகர் விரிவாக்க பகுதி ஆகியவை அடங்கும்.

6வது வார்டில் சாந்தி நகர் 1 முதல் 8 தெருக்கள், வேதக்கோயில் தெரு, ராஜ்கமல், பள்ளிவாசல் 1,2 தெருக்கள், சாந்திநகர் 13 முதல் 31வது தெரு வரை, அம்பேத்கர் காலனி, பெல் அமோசஸ் காலனி 1,2, அண்ணா தெரு, அண்ணா கீழத் தெரு ஆகியவை உள்ளன. 7வது வார்டில் காமராஜர் நகர், பிராந்தான்குளம் வட பகுதி, தூய்மை பணியாளர் காலனி மனகாவலம்பிள்ளை நகர், காந்தி வடக்குத் தெரு, செண்பக நகர், சங்கர் காலனி, பாரதியார் தெரு, ஆசாத் தெரு, வேதக்கோயில் தெரு, சாந்திநகர் 9,10,11 தெருக்கள், திருச்செந்தூர் சாலை, திருமலை தெரு, மகாராஜபிள்ளை தெரு, சண்முகம் பிள்ளை தெரு உள்ளிட்டவை அடங்கும்.

பாளை. மண்டலம் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ள 8வது வார்டில் பாளையங்கோட்டூர் ராஜாக்கள் தெரு, ஆசாரி தெரு, நாடார் தெரு, பிள்ளைமார் தெரு, செந்தில் நகர், அபியா நகர், அணி நகர், திம்மை பெருமாள் சன்னதி தெரு, பரதவர் தெரு, திம்மராஜபுரம் 1 முதல் 10வது தெருக்கள், ஆபுத்திரன் தெரு, காளியம்மன் கோயில்தெரு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.

9வது வார்டில் கனகநாத நாயனார் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, திருமூல நாயனார் தெரு, இயற்பகை நாயனார் தெரு, பாரதிநகர் காவலர் குடியிருப்பு, சடையநாயனார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வருகின்றன.

 பாளை மண்டலம் 32வது வார்டில் திருவனந்தபுரம் சாலை, புதுப்பேட்டை தெருக்கள், லெட்சுமி நரசிங்கபுரம், ேஜாதிபுரம், எம்ஜிஆர் காலனி, செயின்ட் பால்ஸ் ரோடு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நகராட்சி குடியிருப்பு, நம்பிக்கை நகர், ஜெபமாளிகை தெருக்கள் வருகின்றன. 33வது வார்டில் கிருஷ்ணன் கோயில் தெருக்கள், பெருமாள் சன்னதி தெரு, பெருமாள் கீழரதவீதி, பாண்டுரங்கன் தெரு, மார்க்கெட் தெரு, கிருஷ்ணன்கோயில் கீழத்தெரு, செண்பகவனத்தெரு, பெருமாள் ரதவீதிகள், ஆசீர்வாதம் தெரு, மாடவீதிகள் வருகின்றன. 34வது வார்டில் நேசநயினார் தெரு, எரிபத்த நாயனார் தெரு, அருள்மணி தெரு, மிலிட்டரி லைன், எம்பெருமாள் தெரு, அம்பிகாபதி தெரு, இஸ்லாமியர் தெரு, ஜோதி தெரு, பேரருள் தெரு, கடிகார தெரு, கோவலன், கண்ணகி தெருக்கள், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, பட்டுபிள்ளையார் கோயில் தெரு, திருவடி தெரு, சிவன் கோயில் தெருக்கள் வருகின்றன.

35வது வார்டில் பெருமாள் தெற்கு ரதவீதி, மாடவீதி, பட்டினத்தார் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு, குலசேகர ஆழ்வார் தெரு, ராமசாமி கோயில் தெரு, யாதவர் மேலத்தெரு, திருவெண்பாவை தெரு, புனிதவதியார் தெரு, ராஜேந்திரா நகர், திவ்ய பிரபந்த தெரு, மாற்கு சாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வருகின்றன. 36வது வார்டில் ரயில் நகர், நிருபர் காலனி, இந்திராநகர், பிடபிள்யூடி காலனி, பெரியார் நகர், புனித மத்தேயு நகர், எம்ஜிஆர் நகர் காலனி, அன்னை இந்திரா நகர், அண்ணாநகர் பிஎன்கே காலனி மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.

37வது வார்டில் அய்யா சுப்பிரமணிய நகர், டார்லிங் நகர், வெற்றி திருநகர், காசிம்நகர், கோ ஆப் டெக்ஸ் காலனி, காமாட்சி நகர், மூகாம்பிகைநகர், ஆச்சிமடம், வஉசி நகர், போத்தீஸ் நகர், ஜெயந்திநகர், ஐஸ்வர்யா நகர், வெல்கம் காலனி உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. 38வது வார்டில் காசி விஸ்வநாத கோயில் தெரு, அப்துல் ரகுமான் முதலாளி நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 2, மங்கம்மாள் சாலை, கண்ணன் புதுகாலனி, ஆதித்தனார் நகர், ஐஓபி காலனி, ஆரோக்கியநாதபுரம் 1 முதல் 4 தெருக்கள், கவிதாநகர், சீனிவாசநகர், சரண்யாநகர், 39வது வார்டில் மகராஜநகர் மெயின்ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, வெங்கடேஸ்வரா நகர், வேலவன் காலனி, டிவிஎஸ்நகர், ஆசிர்வாத நகர், வசந்தம் காலனி, கல்யாணி நகர் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.

55வது வார்டுக்கு விஐபி அந்தஸ்து?

நெல்லை மாநகராட்சியின் விஐபி வார்டு என்ற கருதப்படும் 55வது வார்டில் இப்போதிருந்தே போட்டிகளுக்கு பஞ்சமில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி உறுதி என்ற நிலைப்பாடு காரணமாக இவ்வார்டில் போட்டியிட அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். முன்பு மேலப்பாளையம் மண்டலத்தில் இருந்து இவ்வார்டு, பாளை மண்டத்திற்கு இம்முறை கைமாறியுள்ளது. இந்த வார்டில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கும் அதிகம். 55வது வார்டில் தியாகராஜநகர், ஜேம்ஸ் நகர், சங்கர் காலனி, குமரேசன் நகர், விஐபி நகர், திருமால்நகர், டிகேசி நகர், மல்லிகா காலனி, ராஜகோபாலபுரம் தெற்கு மற்றும் வடக்கு தெருக்கள், கோகிலா நகர், இபி காலனி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இடம் பெறுகின்றன. மேயர் கனவுக்கான அடித்தளம் இவ்வார்டில் இருந்து எழுவதால், வாக்காளர்களும்  போட்டியிடும் வேட்பாளர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Related Stories: