நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்டத்தில் முதல் நாளில் வேட்பு மனுதாக்கல் இல்லை

நாமக்கல், ஜன. 29: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி அலுவலகங்கள், 19 பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. முதல் நாளான நேற்று 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்பு மனுக்களை நகராட்சி, பேரூராட்சி அலுவலகம் வந்து நேற்று வாங்கி சென்றனர். பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டுகளில், 37,554 வாக்காளர்களும் உள்ளனர்.

இதில் 11வது வார்டு மட்டும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1, 2, 5, 10, 13, 14, 15, 16, 17 மற்றும் 19வது வார்டு ஆகிய 10 வார்டுகள் பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 10 வார்டுகளும் ஆண்கள், பெண்கள் பொது பிரிவினர் போட்டியிடலாம். பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளும் 66,581 வாக்காளர்களும் உள்ளனர். இதில் முதல் வார்டு தாழ்த்தப்பட்ட மகளிர் மட்டும் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது. 2, 4, 5, 9, 10, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 24, 27 மற்றும் 28வது வார்டு ஆகிய 16 வார்டுகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற 16 வார்டுகள் ஆண்கள், பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மோகனூர்: மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோமதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சந்தோசம், அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு, நேற்று மனுதாக்கல் துவங்கியது. பாதுகாப்புக்காக அலுவலக வளாகத்தில் 4 சிசிடிவி கேமராக்கள் ெபாருத்தப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

Related Stories: