சேந்தமங்கலத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழாவையொட்டி, எம்எல்ஏ பொன்னுசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், நகர செயலாளர் தனபாலன், தலைமையாசிரியர்கள் முத்துசாமி, சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல புதுச்சத்திரம் ஒன்றியம் அகரம், லக்கபுரம் பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் செந்தில்குமார் தேசிய கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நல்லதம்பி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், சேர்மன் மணிமாலா சின்னசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பிடிஓக்கள் ரவிச்சந்திரன், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மின்னாம்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் முத்துவேல், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சத்திரம் வட்டார காங்கிரஸ் சார்பில் பாச்சல், ராமநாய்க்கன்பட்டி பகுதியில், மாவட்ட தலைவர் சித்திக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் வட்டார தலைவர் இளங்கோ, திருநாவுக்கரசு, ஒன்றிய குழு துணை தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: