ராசிபுரத்தில் கொடிக்கம்பம் அகற்றம்

ராசிபுரம்:  தமிழகத்தில் பிப்ரவரி 19ம்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலானதால், ராசிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றும்படி, வாழ்த்து, வரவேற்று போஸ்டர்கள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், அம்மா உணவகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை பேப்பர் ஒட்டி மறைக்கும் பணி, அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும்பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மேலும், சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு பூசி அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: