செல்போனால் தகராறு: வாலிபரை கட்டையால் தாக்கிய 3 பேர் கைது

ஓசூர்:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா(30). இவர் ஓசூர் அருகேயுள்ள கப்பகல் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர்களான அசாம் மாநிலத்தை சேர்ந்த ராமு (20), விஜய் (25), பிரான்(26) ஆகியோருடன் தங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், கிருஷ்ணா ஊருக்கு போன் பேச வேண்டுமென ராமுவிடம் செல்போன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கிருந்த ராமு, விஜய், பிரான் ஆகிய 3 பேரும், கிருஷ்ணாவை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணா, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராமு, விஜய், பிரான் ஆகிய 3 பேர் மீதும் மத்திகிரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: