மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் இன்று (28ம்தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, மாநகர, பேரூர் திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும். ஓசூர் மாநகரம், தேன்கனிக்கோட்டை பேரூர் மற்றும் கெலமங்கலம் பேரூர் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: