ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா

சிங்கம்புணரி: குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் திவ்யாபிரபு கொடியேற்றினார். பிடிஓக்கள் லட்சுமண ராஜூ, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மேலாளர் அருட்பிரகாசம், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி சதத்துநிசா தேசிய கொடியேற்றினார். தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜான் முகமது, மல்லாக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயாராதாகிருஷ்ணன், அரளிக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ், ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், மதுராபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, முறையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், பிரான்மலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன் கொடியேற்றினர்.

எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். செயலர் சந்திரசேகரன் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி,  போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி தாளாளர் பேராசிரியர் காந்தி கொடியேற்றினார். இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் விஜயாகுமரன் கொடியேற்றினார். பிடிஓ சந்திரா, மேலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டனர். வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் கருப்பசாமி கொடி ஏற்றினார். உதவியாளர் ராஜேஷ், கண்ணன், டைபிஸ்ட் சாந்தி கலந்துகொண்டனர். வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் கொடி ஏற்றினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் கணேசன், கிறிஸ்டோபர், ஜெயலெட்சுமி கலந்துகொண்டனர்.

Related Stories: