தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு விருது

திருப்பூர்:  தமிழகத்தின்  சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையம் விருது  பெற்றுள்ளது. தமிழக முதல்வரிடம் விருதை பெற்ற  இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக அரசின் சார்பில் ஆண்டு  தோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் காவல்  நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் கேடயமும்  பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020ம்  ஆண்டில் தமிழகத்திலேயே சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகள், களவு சொத்துக்கள்  மீட்பு என 95 சதவிகிதம் வழக்குகளை முடித்து தமிழகத்தின் தலை சிறந்த காவல்  நிலையமாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்தது.

ஜனவரி  26ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெற்கு காவல் ஆய்வாளர் பிச்சையாவுக்கு முதல் பரிசுக்கான கோப்பையை  வழங்கி சிறப்பித்தார். கோப்பையை பெற்று திருப்பூருக்கு வருகை தந்த இன்ஸ்பெக்டக்கு சக காவலர்கள் மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை  அணிவித்தும் வரவேற்பு செய்தனர்.

கமிஷனரிடம் வாழ்த்து: தமிழகத்தில் தலை சிறந்த காவல்  நிலையமாக தெற்கு காவல் நிலையம் வெற்றி பெற்று அதற்கான கோப்பையை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையாவுக்கு வழங்கினார். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா விருதுடன் சென்ற மாநகர  போலீஸ் கமிஷனரிடம் வாழ்த்து பெற்றார். துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி,  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: