ஜி.சி.டி. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை: கோவை ஜி.சி.டி. கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. முன்னதாக, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நுழைவு வழி, வெளியேறும் வழி, மேசைகள் அமைத்தல், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கக்கூடிய (ஸ்ட்ராங் ரூம்) உள்புறம் மற்றும் வெளிப்புறம், பார்வையாளர் அரங்கு, பத்திரிகையாளர் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர்( பொறுப்பு) ராமசாமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஷ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: