பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று

பெரம்பலூர், ஜன.28: பெரம்பலூர் மாவட்டத்தில் கொ ரோனா தொற்று படிப்படி யாக குறைகிறது. 3இலக்க த்திலிருந்து 2 இலக்க எண்ணிக்கைக்கு மாறியது. பெரம்பலூர் மாவட்ட அளவில் இதுவரை 2,61,135 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. இதில் 13,980 நபர்க ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 13,014 நபர்கள் சிகிச்சைபெற்று வீடு திரு ம்பியுள்ளனர். நேற்று வரை மாவட்டஅளவில் கொரோனா தொற்றுக்கு 248பேர் பலியாகியுள்ளனர்.

ஜனவரி தொடக்கத்தில் 1ம் தேதி 3பேர், 2ம்தேதி 2 பேர், 3ம்தேதி 4பேர் என்றிருந்த கொரோனா தொற்றுப் பர வல் 5ம்தேதி முதல் 18ம் தேதி வரை இரட்டை இலக்கத்திற்கு மாறிய கொரோனா தொற்றுப் பரவல், 19ம்தேதி 3 இலக்க எண்ணிற்கு மாறியது. குறிப்பாக 19ம் தேதி 103, 20ம் தேதி 123, 21ம்தேதி 128, 22ம்தேதி 113, 23ம்தேதி 116, 24ம்தேதி 107, 25ம்தேதி 108 எனஅதிகரித்து வந்தது.கடந்த 2 நாட்களாக 100க்குக் கீழ் குறைந்து வருகிறது. இதன்படி 26ம்தேதி 90, நேற்று 27ம் தேதி 63 என குறைந்து வருவது மாவட்ட மக்களுக் கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அளவில் 718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: