புதுகையில் 2 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட 30 பறக்கும் படை

புதுக்கோட்டை, ஜன.28: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (28ம் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 4ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5ம்தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. மார்ச் நான்காம் தேதி தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் இனி நகராட்சி, பேரூராட்சிகளில் எந்த வித மக்கள் நல பணிகள் நடப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இனி அங்க தேர்தல் பணிகள் மட்டுமே நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரண்டு நகராட்சிகளும் , கீரனூர், ஆலங்குடி, கீரமங்கலம், அரிமளம், பொன்னமராவதி, இலுப்பூர், அன்னவாசல், கறம்பக்குடி என எட்டு பேரூராட்சிகளும் உள்ளன.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 189 வார்டுகளில் உறுப்பினர் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்த பிறகு இரண்டு நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கு தலைவர் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். இதில் 10 தலைவர் மற்றும் 10 துணை தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் முறையாக நடைபெற 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு எட்டு மணி நேரத்திற்கு 10 பறக்கும் படைகள் என மூன்று எட்டு மணி தேர்ந்திற்கு முப்பது பறக்கும் படைகள் அமைக்கட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் தேர்தல் நடைபெறும் நகராட்சி, பேரூராட்சிகளில் தினசரி சோதனை பணிகளில் ஈடுபடும். விதிமுறைகளை மீறும் அனைவரும் மீதும் விதிகளின் அப்டி தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: