புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் 73வது குடியரசு தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் ஆர்.ஏ.குமாரசாமி கொடியேற்றி வைத்து குடியரசு தின வாழ்த்துரை வழங்கினார். தாளாளர் பி.கருப்பையா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துரை வழங்கியதாவது, நல்ல அனுபவத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். உடல்பலம், மனபலம், மனஎழுச்சிப்பலம், சமுதாய பலம் போன்ற திறன்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வளர்த்துவிட வேண்டும். மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றவேண்டும். மாணவர்களை சரிசெய்து அதன் மூலம் சமுதாய மாற்றத்தினை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். நாம் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என்றும் பெற்றோருக்கும் நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும் நாட்டுப்பற்றின் முக்கியத்துவத்துவத்தையும் எடுத்துரைத்தார்கள். முதல்வர்கள் புகழேந்தி, முனைவர் எம்.இளங்கோவன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் திருமலையரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Stories: