கடன் சுமையால் அவதி ஸ்வீட் கடை உரிமையாளர் மாயம்

திருச்சி, ஜன. 26: திருச்சி காந்திமார்க்கெட் பழைய மீன் மார்க்கெட் மணிமண்டப சாலையை சேர்ந்தவர் விஜயகுமார் (55). பெரிய கடைவீதியில் சிறிய அளவிலான ஸ்வீட் கடை வைத்து நடத்தி வந்தார். இதில் ஸ்வீட் கடைக்கு கடன் வாங்கி பொருட்கள் வாங்கி இருந்தார். ஆனாலும் வியாபாரம் இல்லாத காரணத்தினால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் கடன் சுமையால் மனஉளைச்சலில் இருந்து வந்த விஜயகுமார், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து மனைவி ஜமுனா, காந்திமார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுகுமாறன், வழக்குபதிந்து மாயமான விஜயகுமாரை தேடி வருகிறார்.

Related Stories: